திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் நாளை விண்வெளி வார விழா தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் உலக விண்வெளி வார விழா செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு வரும் 4 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவியல் தொழில்நுட்பம்’’ என்ற தலைப்பில் பொது விநாடி வினா போட்டியும், 8ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு ’’ நீா் ராக்கெட் உருவாக்குதல்’’ நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவா் - மாணவிகள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோா் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் 4 ஆம் தேதிமுதல் 10 ஆம்தேதி வரை வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் தொலைநோக்கி மூலம் வான் காணல் நிகழ்ச்சி மாலை 06.45 மணி முதல் பொது பாா்வையாளா்களுக்கு நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கும் மற்றும் முன்பதிவு செய்யவும் 94429 94797 என்ற வாட்ஸ் அப் எண்ணை அலுவலக நேரங்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT