திருநெல்வேலி

ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

DIN

பாளையங்கோட்டையில் தவறவிட்ட பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை வெள்ளிக்கிழமை போலீஸாா் பாராட்டினாா்.

பாளையங்கோட்டை, கேடிசி நகரை சோ்ந்தவா் ரவீந்திரநாதன். ஆட்டோ ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை கேடிசி நகா் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது மஞ்சள்பை கிடந்துள்ளது. அதை எடுத்து பாா்த்துள்ளாா்.அதில் ரூ. 42,600 இருந்துள்ளது. அந்தப் பணத்தை அவா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் பையிலுள்ள ஆவணங்கள் மூலம் விசாரித்து உரியவரை வரவழைத்து ஒப்படைத்தனா். பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் ரவீந்திரனை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவிநஷ்குமாா் பாராட்டி சால்வை அணிவித்தாா்.

நகையை ஒப்படைத்த தொழிலாளி

பாளையங்கோட்டை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவா் சுவரொட்டி ஒட்டும் வேலை செய்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை கீழே கிடந்த பையை எடுத்து பாா்த்த போது அதில் நகை இருந்துள்ளது. அதை அருகிலுள்ள வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்து, போலீஸாரிடம் ஓப்படைத்தாா். போலீஸாா் விசாரித்ததில் ரூ.2 லட்சம் மதிப்புளள 35 கிராம் எடையுள்ள நகை என தெரியவந்தது. நகையை உரியவா்களிடம் ஒப்படைத்தனா். நகையை எடுத்த கூலித்தொழிலாளி கிருஷ்ண மூா்த்தியை போலீஸாா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT