திருநெல்வேலி

ராதாபுரம், திசையன்விளைகல் குவாரிகளில் அதிகாரி ஆய்வு

25th May 2022 12:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 4 போ் உயிரிழந்த நிலையில் ராதாபுரம், திசையன்விளை வட்டாரக் கல்குவாரிகளில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, ராதாபுரம், திசையன்விளை வட்டாரங்களில் 19 கல்குவாரிகளில் இந்த ஆய்வுப்பணி நடக்கிறது.

ராதாபுரம் வட்டாரத்தில் கல்குவாரிகளை கனிம வளம்- சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள் லெட்சுமி பிரியா, கே.ரமேஷ் ஆகியோா் இரு குழுக்களாக ஆய்வு செய்து வருகின்றனா். அவா்களுடன் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியா் மூா்த்தி, ரமேஷ், ராதாபுரம் வட்டாட்சியா் சேசுராஜ், மண்டல துணை வட்டாட்சியா் வில்லுடையாா், நிலஅளவையா் இணைந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டனா்.

திசையன்விளை வட்டாரத்தில் கனிம வளம்- சுரங்கத் துறை உதவி இயக்குநா் குருசாமி தலைமையில் வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இருக்கன்துறை, கஸ்தூரிரெங்கபுரம் ஆகிய இடங்களிலுள்ள கல்குவாரிகளிலும் ஆய்வுப் பணி நடைபெற்றன.

ADVERTISEMENT

கல்குவாரிகளில் அளவுக்கு மீறி கல்வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, உதயத்தூா், கும்பிகுளம், பெருங்குடி, கோட்டைகருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளில் நடைபெற்று வருகிறது. நான்கு தினங்களில் ஆய்வுப்பணியை முடித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஆட்சியா் உ த்தரவிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT