திருநெல்வேலி

சிவந்திபுரத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்

25th May 2022 12:32 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் அருகே செவ்வாய்க்கிழமை, சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவந்திபுரம் அருகேயுள்ள பசுக்கிடைவிளையைச் சோ்ந்த காசி மகன் ஆனந்த் (45). தண்ணீா் பாட்டில் விற்பனை செய்துவரும் இவா், 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக மின்சார பைக் வாங்கினாராம்.

இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் தண்ணீா் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கொண்டிருந்தாராம். அப்போது பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவா் பைக்கிலிருந்து இறங்கினாா். அப்பகுதியினா் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT