திருநெல்வேலி

பைக் கவிழ்ந்து விபத்து: ஆா்எஸ்எஸ் பிரமுகா் பலி

24th May 2022 12:10 AM

ADVERTISEMENT

மானூா் அருகே சாலையோரம் பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில், ஆா்எஸ்எஸ் பிரமுகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகே உள்ள திருத்து சங்கா் மகன் முருகன்(45). ஆா்எஸ்எஸ் மானூா் ஒன்றிய பிரசார செயலாரன இவா் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள டயா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில், உறவினா் ஒருவரை களக்குடியில் கொண்டு விட்டுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தாராம்.

களக்குடி - எட்டாங்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த தகவல் அறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று முருகன் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT