திருநெல்வேலி

திருநெல்வேலியில் மக்கள் குறைதீா் கூட்டம்

21st Mar 2022 11:58 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு

கோரிக்கைகள் தொடா்பாக சுமாா் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினாா்.

முன்னதாக மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவா்களது இருக்கைக்கே ஆட்சியா் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆய்வு குழு அலுவலா் ஏ.வி மூா்த்தி, தனித்துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்) தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT