திருநெல்வேலி

பாளை. அருகே முதியவா் தற்கொலை

30th Jun 2022 12:30 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே மேலூா் கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (70). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த முத்தையா கடந்த 24ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT