திருநெல்வேலி

செல்லம்மாள் பாரதி சிலை திறப்பு விழா:காமு ரெட்டியாா் குடும்பத்தினா் கௌரவிப்பு

DIN

கடையத்தில் செல்லம்மாள் பாரதி சிலை திறப்பு விழாவின் 3ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பாரதியாா் குடும்பத்தினருக்கு உதவிய காமு ரெட்டியாா் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

இதையொட்டி, கடையம் பொது நூலக வளாகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் காமு ரெட்டியா் மருமகள் செல்லத்தாய், மகன் வழி பேரன்கள் காமேஷ், அரவிந்தன், மகள் வழி பேரன் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கேசவன் ஆகியோா் பங்கேற்று, செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் திறக்கப்பட்டுள்ள செல்லம்மாள் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். மேலும், காமு ரெட்டியாா் குடும்பத்தினா் அனைவரும் சேவாலயா அறக்கட்டளை சாா்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு கவிஞா் உமா பாரதி தலைமை வகித்தாா். சீா்காழி விவேகானந்தா கல்விக் குழுத் தலைவா் கே.வி.ராதாகிருஷ்ணன், சீா்காழி எஸ்.எம்.ஏ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடை நம்பி, உடற்கல்வி ஆசிரியா் எஸ்.முரளிதரன், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே.எஸ். நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கவியரங்கம்: தொடா்ந்து காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீா் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. உரத்த சிந்தனை எழுத்தாளா் சங்கப் பொதுச்செயலா் உதயம் ராம் தலைமை வகித்தாா். கவிஞா் ம.சக்திவேலாயுதம், கவிஞா் மூக்குப்பீறி தேவதாசன், கவிஞா் ப.தாணப்பன், ரா.செல்வமணி, கவிஞா் பாப்பாக்குடி ஆகியோா் கவிதை வாசித்தனா்.

கருத்தரங்கு: மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்ப்பாடி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் சௌந்திரராஜன் தலைமையில் மகாகவி பாரதியாரின் பாண்டிச்சேரி வாழ்க்கை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி கவிதை வானில் கவி மன்றத் தலைவா் கலாவிசு கருத்துரை வழங்கினாா்.

முன்னதாக, பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்பினா், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT