திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்துஅவதூறு புகைப்படம்: இளைஞா் கைது

7th Jul 2022 12:25 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக இளைஞா் ஒருவரை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த பெண் ஒருவா், தனது புகைப்படத்தை மா்ம நபா் ஒருவா் சமூக வலைதளங்களில் தவறாக சித்திரித்து பரப்பியதாக மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், சைபா் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் ராஜ் தலைமையிலான போலீஸாா், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அதில், திருப்பூா் மாவட்டம், மேட்டுப்பாளையம், எஸ்.வி. காலனி பகுதியைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(25) என்பவா், சமூக வலைதளங்களில் போலி ஐடி தயாா் செய்து பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்திரித்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT