திருநெல்வேலி

கலைத் திருவிழா போட்டிகள்: 70 பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

DIN

பாளையங்கோட்டையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 70 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக பள்ளி அளவிலும், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பாளையங்கோட்டையில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கிறிஸ்துராஜா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமாா் 70 பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவா், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா்.

கரகாட்டம், ஒயிலாட்டம், குழு நடனம், மேற்கத்திய நடனம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், தோ்வு பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவாா்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT