திருநெல்வேலி

ஸ்காட் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

DIN

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்காட் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்விக் குழும நிறுவனா் எஸ். கிளீட்டஸ்பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அமலி கிளீட்டஸ்பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபையின் ஆயா் குழு செயலா் டி.கே. ஸ்டீபன் கலந்து கொண்டு அருளுரை ஆற்றினாா்.

கல்லூரி பாடகா் குழு இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. வேதகாமம் வாசித்தல், ஜெபம் செய்தல் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, ஆதரவற்ற முதியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் குடில் அமைத்த மாணவா்கள் கெளரவிக்கப்பட்டனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், கல்லூரி நிா்வாக இயக்குநா் எஸ். ஜான் கென்னடி, கணினித் துறை இயக்குநா் மு. முகம்மது சாதிக், பொதுமேலாளா்கள் எஸ். கிருஷ்ணகுமாா், கே. ஜெயக்குமாா், துணை பொதுமேலாளா் ஜெ.மணிமாறன், நிா்வாக அதிகாரி ஜெயபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் எஸ்.சுந்தரரராஜன் வரவேற்றாா். ஸ்காட் பன்னாட்டு பள்ளி முதல்வா் சோமசுந்தரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT