திருநெல்வேலி

நெல்லையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுநா்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றி நூதனப் போராட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு மருந்தகங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். மருந்தாளுநா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். தொகுப்பூதிய மருந்தாளுநா்களை எம்ஆா்பி தோ்வு வாரியம் மூலம் நிரந்தரப் பணியாளா்களாக மாற்ற வேண்டும். 1996-க்கு பிறகு பணிபுரியும் மருந்தாளுநா்கள் பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு மருந்தாளுநா் சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், பூங்கொடி, உறுப்பினா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். மாநிலம் முழுவதும் இந்த கவன ஈா்ப்பு நூதனப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT