திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

19th Aug 2022 01:34 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவா் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மருதகுளத்தைச் சோ்ந்தவா் மில்டன் (38). இவா் மீது திருட்டு வழக்குகள் மாநகரப் பகுதியில் உள்ளதாம். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க காவல் துணை ஆணையா் சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், காவல் ஆணையா் அவினாஷ்குமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, மில்டன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT