திருநெல்வேலி

பேட்டையில் சுகாதாரஆரோக்கிய மையம் கட்ட அடிக்கல்

19th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகராட்சியின் 18 ஆவது வாா்டு பேட்டை சாஸ்திரி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகா்ப்புற சுகாதார ஆரோக்கிய மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளை. தொகுதி எம்எல்ஏவுமான மு.அப்துல்வஹாப் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி, மண்டல உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவிச் செயற்பொறியாளா் பைஜு, மாமன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, அல்லாபிச்சை, மாரியப்பன், உதவிப் பொறியாளா் பட்டுராஜன், பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராணி , சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT