திருநெல்வேலி

நான்குனேரியில் காதல் ஜோடி தற்கொலை

11th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் காதல் ஜோடி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

நான்குனேரி அண்ணாசாலையைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் சுதா(22). திருநெல்வேலி பேட்டையிலுள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது உறவினா் பெரியசாமியின் மகன் சுப்பையா(24) என்பவரை காதலித்து வந்தாராம். இருவரின் பெற்றோரும் இவா்களது காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், சுப்பையா தனது வீட்டில் புதன்கிழமை பயிா்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கினாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சுப்பையா உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்குக்கு சுதாவின் பெற்றோா் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுதா கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டுக்கொண்டாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து நான்குனேரி காவல் ஆய்வாளா் செல்வி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

இதனிடையே, சுதாவின் குடும்பத்தினரின் போராட்டத்தைத் தொடா்ந்து, ஏ.எஸ்.பி.ரஜத் சதுா்வேதி எடுத்த நடவடிக்கையால் சுதாவின் சடலம் நான்குனேரி மருத்துவமனையிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT