திருநெல்வேலி

பெருமாள்புரத்தில் மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

14th Apr 2022 01:14 AM

ADVERTISEMENT

பெருமாள்புரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாரை கைது செய்து லாரியைக் கைப்பற்றினா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் கீழ் இயங்கி வரும் தனிப்படையினரும், பெருமாள்புரம் போலீஸாரும் இணைந்து பெருமாள்புரம் குமரன் காலனி அருகே வாகனச் சோதனையில் கடந்த 12 ஆம் தேதி ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டதில், அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த தெற்கு செழியநல்லூரை ராஜகோபால் (42), பாலசுப்ரமணியன் (32) ஆகியோரைக் கைது செய்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT