திருநெல்வேலி

மதுவிற்பனை: 4 போ் கைது

14th Apr 2022 03:36 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விதிமீறி மது விற்ாக 2 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 68 மது பாட்டில்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், தச்சநல்லூா் சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றபோது அங்கு மது விற்ாக தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகாராஜன் (42) என்பவரையும், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே கேட் அருகே பாளையைச் சோ்ந்த சிவகுருநாதன் (71) என்பவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT