திருநெல்வேலி

ராணி அண்ணா கல்லூரியில் 8-இல்தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

5th Apr 2022 01:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.8) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பழையபேட்டை ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப் இல் இணைந்து பயன்பெறலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT