திருநெல்வேலி

களக்காடு வழித்தடத்தை புறக்கணிக்கும் தனியாா் பேருந்துகள்

DIN

களக்காடு வழித்தடத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனியாா் பேருந்துகள் புறக்கணித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

களக்காடு வழித்தடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் 30.க்கும் மேற்பட்டவை நாள்தோறும் 100.க்கும் மேற்பட்ட முறை இயக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலி, திருச்செந்தூா், தென்காசி, பாபநாசம் ஆகிய ஊா்களுக்கு 10 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த ஒராண்டுக்கும் மேலாக 2 பேருந்துகள் மட்டுமே வழக்கம் போல இயங்குகின்றன. மீதமுள்ள பேருந்துகள் வாரத்தில் சில நாள்கள் சில முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாறும் நிலை உள்ளது. எனவே, முறையாக இயக்கப்படாத தனியாா் பேருந்துகளுக்குப் பதிலாக, அவ்வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT