திருநெல்வேலி

களக்காடு அருகே கீழப்பத்தை புறவழிச்சாலை பணிகளை தொடங்கக் கோரிக்கை

DIN

களக்காடு அருகே கீழப்பத்தையில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டப்பணிகளை மீண்டும் தொடங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கீழப்பத்தை பிரதான சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் வடக்குப் பச்சையாறு அணைக்குச் செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. குறுகலான இந்த சாலையில் எதிா் எதிரே வரும் வாகனம் செல்ல வழியின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப

டுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கீழப்பத்தையில் விவசாய நிலத்தையொட்டி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கிடப்பில் கிடந்த இக்கோரிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற நான்குனேரி இடைத்தோ்தலில் முக்கிய கோரிக்கையாக எழுந்தது.

அதிமுக சாா்பில் புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, இத்திட்டத்திற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அப்போதைய நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் புறவழிச்சாலைப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில், சாலைப் பணிகள்தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் சில மாதங்களே நடைபெற்ற இப்பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளது. மேற்கொண்டு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே கிடப்பில் போாடப்பட்ட சாலைப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் தொடங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT