திருநெல்வேலி

அஞ்சலகங்களில் நாளை முதல் 29 வரை தங்கப் பத்திர விற்பனை

DIN

அஞ்சல் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் (அக். 25) வெள்ளிக்கிழமைவரை (அக். 29) தங்கப் பத்திர விற்பனை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளா் கோ. சிவாஜி கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு ரிசா்வ் வங்கி மூலம் தங்கப் பத்திரத்தை வெளியிடுகிறது.

அஞ்சலகங்களில் இந்த விற்பனை திங்கள்கிழமை முதல் (அக். 25) வெள்ளிக்கிழமைவரை (அக். 29) நடைபெறவுள்ளது. தனிநபா் ஒரு நிதியாண்டுக்கு 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும்போது அன்றைய விலைக்கு நிகராக பணமும் பெறலாம். தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,761 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் காா்டு, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வாங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT