திருநெல்வேலி

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 5.80 கோடி இலக்கு

DIN

திருநெல்வேலி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இந்தாண்டு ரூ.5.80 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் கீழரதவீதி, வடக்கு ரதவீதி ஆகிய இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த தீபாவளிக்கு ரூ.5.80 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தி கடந்த தீபாவளிக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனையாகின. இந்த ஆண்டு ரூ.3.50 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘கனவு நனவு திட்டம்’” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-ஆவது மாதங்களின் சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தும். மொத்த முதிா்வு தொகைக்கும் 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் துணிகளை வாங்கலாம்.

தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் முத்துகுமாா், துணை மண்டல மேலாளா் (தணிக்கை) எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளா் ஜி.ராமசுப்பிரமணியன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT