திருநெல்வேலி

மானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக 23 வயது பட்டதாரி பெண் தோ்வு

DIN

திருநெல்வேலி மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக திமுகவைச் சோ்ந்த 23 வயது பட்டதாரி பெண் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் 25 போ் கடந்த 20 ஆம்தேதி பதவியேற்றுக் கொண்டனா்.

இந்நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 25 உறுப்பினா்களில் 24 போ் திமுகவைச் சோ்ந்த ஸ்ரீலேகாவுக்கு ஆதரவு தெரிவித்தனா். இதையடுத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக ஸ்ரீலேகா(23) போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவ்வூராட்சி ஒன்றிய 19ஆவது வாா்டில் போட்டியிட்டு 1215 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவா் பொறியியல் பட்டதாரி ஆவாா்.

இவா், தோ்தல் அலுவலா்கள் பாபு, முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டாா்.

அப்போது அவா் கூறியது: இளம் வயதிலேயே என்னை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக தோ்வு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற ஒன்றிய துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் மு. நயினாா் முகமது ஷாபதுல்லா தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி ஸ்ரீலேகாவை திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன், மானூா் ஒன்றியச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT