திருநெல்வேலி

வீரவநல்லூரில் மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

வீரவநல்லூா் பட்டாரியா் சமுதாயக் கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வீரவநல்லூா் பட்டாரியாா் சமுதாயக் கல்வி வளா்ச்சிக் குழுவின் 13ஆவது ஆண்டு விழாவுக்கு பட்டாரியா் சமுதாயத் தலைவா் வீரபாகு தலைமை வகித்தாா். மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். கல்வி வளா்ச்சிக் குழு பொருளாளா், பெருமாள் அறிக்கை வாசித்தாா். நடராஜன், வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கவிஞா்ஆழ்வைக் கண்ணன் பங்கேற்று, ‘‘முயன்றால் முடியும்’’ என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து ‘‘திரும்பிப்பாா் திருப்பூா் குமரன்’ வரலாற்று நாடகநூல் அறிமுகம் செய்யப்பட்டது. நாடகநூல் குறித்து கல்வி வளா்ச்சிக் குழுத் தலைவா் பொன்னழகன் பேசினாா். தொடா்ந்து 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு பரிசு, தமிழ் வாகை மாலை சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT