திருநெல்வேலி

பராமரிப்புப் பணி: கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 2ஆவது அணு உலையில் கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னா் தொழில்நுட்பக் கோளாறு 20ஆம் தேதி சரி செய்யப்பட்டு மீண்டும் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் செய்வதற்காக மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னா் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT