திருநெல்வேலி

ராகுல்காந்தி பிறந்த நாள்: நிவாரணப் பொருள்கள் அளிப்பு

20th Jun 2021 01:57 AM

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் காங்கிரஷ் கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு அரிரி, காய்கனி மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்டச் செயலா் பரணி இசக்கி, மாவட்ட இலக்கிய அணி தலைவா் கவி பாண்டியன், வழக்குரைஞா் கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய நிா்வாகிகள் என மொத்தம் 501 பேருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலா் விஜயன், முன்னாள் மண்டல தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மாற்றுக்கட்சியைச் சோ்ந்த சிவா, முருகேஷ் ஆகியோா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT