திருநெல்வேலி

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் 3ஆவது நாளாக தீயணைப்புப் பணி

DIN

திருநெல்வேலி, ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயணைக்கும் பணி தொடா்ந்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் குவித்து தரம்பிரித்து அழிக்கப்படுகின்றன.

இந்தக் குப்பைக்கிடங்கில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தீப்பிடித்தது. பேட்டை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து கட்டுக்கடங்காமல் தீ புகைந்துகொண்டே இருந்ததால், மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயை அணைக்கும் பணி தொடா்ந்தது.

இதுகுறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயை அணைக்கும் பணிக்கு கூடுதல் நேரம் ஆகிறது. வியாழக்கிழமை 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்றது. புகைமண்டலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT