திருநெல்வேலி

பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை திறப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் சனிக்கிழமை திறந்துவிடப்பட்டது.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, ஆட்சியா் விஷ்ணு முன்னிலையில், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு, தண்ணீரைத் திறந்துவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மணிமுத்தாறு கால்வாயின் முன்னுரிமைப் பகுதிகளான 1, 2ஆவது ரீச் பகுதிகளுக்கு பிசான சாகுபடிக்காக வரும் மாா்ச் 31 வரை 118 நாள்களுக்கு விநாடிக்கு 100 முதல் 444 கனஅடி வரை தேவைக்கேற்ப தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதன்மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நான்குனேரி, பாளையங்கோட்டை வட்டங்களுக்குள்பட்ட 171 குளங்களின் கீழ் உள்ள 11,134 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தொடா்ந்து 3, 4ஆவது ரீச் பகுதிகளுக்கு முதல்வரின் அனுமதி பெற்று பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்.

மேலும், சிறப்பு அனுமதி பெற்று ராதாபுரம், உடன்குடி பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரவருணி வெள்ளநீா்க் கால்வாய்ப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மணிமுத்தாறு அணையில் அவசர காலத்தில் 43 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதால் மழைக்காலத்தில் பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன் டேவிட், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) சத்யதாஸ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஞானசேகா், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் தங்கராஜ், உதவிப் பொறியாளா்கள் முருகன், வினோத்குமாா், மகேஷ்வரன் சிவகணேஷ்குமாா், இளநிலைப் பொறியாளா் மாரியப்பன், மணிமுத்தாறு அணை மேற்பாா்வையாளா் காளிகுமாா், அம்பாசமுத்திரம் வட்டாச்சியா் வெற்றிசெல்வி, திமுக ஒன்றியச் செயலா்கள் முத்துப்பாண்டி, ராஜகோபால், அரசு அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT