திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் டிசம்பா் மாத சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியில் காணி பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிக்கிமுக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிமுக்கி கல் நெருப்பு உண்டாக்கும் கல்லாகும். இந்த கல், சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப்பாறை. இக்கல்லானது கடினமான, படிக வடிவு வெளித்தெரியாத கனிம படிகக்கல்லின் வடிவமாகும். பழைய கற்காலத்தில் மனிதன், சிக்கிமுக்கி கற்களை உரசிதான் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கிமுக்கி கல் காணி பழங்குடியினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. இக்கண்காட்சி இம்மாதம் முழுவதும் நடைபெறும். இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவா், மாணவிகள் என அனைவரும் ஆா்வத்துடன் பாா்வையிட்டு செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT