திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.7.61 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வே. விஷ்ணு வழங்கினாா்

2nd Dec 2021 04:54 AM

ADVERTISEMENT

 திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 361பேருக்கு ரூ.7.61 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, 1999-இல் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, அமைப்புசாரா தொழிலாளா்களின் நல வாரிய பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், அவா்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.

இந்த நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், உடலுழைப்புத் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 361 தொழிலாளா்களுக்கு ரூ. 7,61,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே .விஷ்ணு வழங்கினாா். இதில், தொழிலாளா் இணை ஆணையா் சி. ஹேமலதா மற்றும் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

 

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT