திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு 900 பயனாளிகள் பயனடையும் வகையில் ஊரகப் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு உள்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள கணவரை இழந்தவா்கள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். முந்தைய ஆண்டுகளில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT