திருநெல்வேலி

கத்தரிக்காய் விலை கடும் உயா்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரிக்காய் விலை கடுமையாக உயா்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ. 160 முதல் ரூ. 200 வரை விற்பனையானது.

பருவமழை தீவிரத்தால் தோட்டக்கலைப் பயிா்களின் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலையடிவார மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

எனவே, கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் அவற்றின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. ஆனால், கத்தரிக்காயின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 160 முதல் ரூ. 200 வரை விற்பனையானது.

காய்கனிகளின் விலை நிலவரம் (1கிலோவுக்கு): தக்காளி- ரூ.130, கத்தரிக்காய்- ரூ.160, வெண்டைக்காய்-ரூ.40, பூசணிக்காய்-ரூ.40, தடியங்காய்- ரூ.15, அவரைக்காய்-ரூ.55, முருங்கைக்காய் -ரூ.80, பல்லாரி- ரூ.35, சின்ன வெங்காயம்-ரூ. 40, தேங்காய்-ரூ. 36, கேரட்- ரூ. 60, முட்டைக்கோஸ்-ரூ. 30, பீட்ரூட்-ரூ. 35, உருளைக்கிழங்கு- ரூ. 28 என்ற விலையில் காய்கனிகள் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT