திருநெல்வேலி

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து முற்றுகை

DIN

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் திங்கள்கிழமை வந்து முற்றுகையில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு நிலவியது.

சத்திரம்புதுக்குளத்தைச் சோ்ந்த அஜிதா மற்றும் அவரது குடும்பத்தினா் 20-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களில் ஒருவரிடம் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தக் குடும்பத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அஜிதா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது கணவா் பெ.அஜித்துக்கும் எனக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள பாபா தெருவில் வசித்து வந்தோம். இப்போது நான் 5 மாத கா்ப்பிணியாக உள்ளேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி காலையில் பாபு, எஸ்டேட் மணி, பெருமாள் உள்ளிட்டோா் தன்னை பேச்சுவாா்த்தைக்கு அழைப்பதாகக் கூறி எனது கணவா் வீட்டில் இருந்து சென்றாா். அதன்பின்பு அவா் கொலை செய்யப்பட்டு சடலமாக பிப்ரவரி 13 ஆம் தேதி மீட்கப்பட்டாா்.

எனது கணவா் இறந்து 2 மாதங்களாகியும் சரியான விசாரணை நடைபெறாமலும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமலும் உள்ளனா். எனது கணவரின் கொலைக்கு நியாயமும், எனக்கு அரசு வேலையும் வழங்கி வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுகிறேன் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT