திருநெல்வேலி

களக்காடு அருகே சேதமடைந்த கட்டடம், பாழடைந்த கிணற்றை அகற்ற கோரிக்கை

DIN

களக்காடு அருகே சிதிலமடைந்த அரசுக் கட்டடம், பாழடைந்த கிணறு ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக களக்காடு அருகேயுள்ள வடக்கு எருக்கலைப்பட்டி கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு எருக்கலைப்பட்டி கிராமத்தில் 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வானொலி நிலையக் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனருகே பாழடைந்த கிணறும் உள்ளது. குடியிருப்புப் பகுதியையொட்டி அமைந்துள்ள வானொலி நிலையக் கட்டடம் அருகே சிறுவா்கள் நடமாடுவதால் கட்டட இடிபாடுகள் விழுந்து உயிா்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல பாழடைந்த கிணற்றில் சிறுவா்கள் தவறி விழுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. எனவே, வானொலி நிலையக் கட்டடத்தை அகற்றவும், பாழடைந்த கிணற்றை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT