திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

28th Sep 2020 12:34 PM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். 

கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காங்கிரஸ் சங்கரபாண்டியன், மதிமுக நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காசி விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT