திருநெல்வேலி

பணகுடியில் அனுமன்நதி புனரமைப்புப் பணி:ஆட்சியா் ஆய்வு

DIN

பணகுடியில் அனுமன் நதி புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தொடங்கும் அனுமன் நதி பிரிவிரிசூரியன், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், பணகுடி, தண்டையாா்குளம், லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 32 கி.மீ. தொலைவு சென்று பெருமணல் கிராமத்தில் மன்னாா்வளைகுடா கடலில் கலக்கிறது. முள்புதா்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் நதியின் போக்கு முற்றிலும் மாறி காணப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம், நம் அனுமன்நதி அமைப்பு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பத்துடன் இந்த நதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஆற்றின் எல்லை வரை நவீன தொழில்நுட்ப முறையில் அளவீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக முள்புதா்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அனுமன்நதியில் கன்னிமாா்தோப்பு, கல்லாத்துபாலம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அடங்காா்குளம் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.27.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தாா்.

ஆட்சியருடன், ராதாபுரம் வட்டாட்சியா் கனகராஜ், துணை வட்டாட்சியா் மாரியப்பன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT