திருநெல்வேலி

நான்குனேரி அருகேமண் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

DIN

நான்குனேரி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளியதாக 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா தலைமையில் வருவாய்த் துறையினா் கிருஷ்ணன் புதூா் நான்குவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக குளத்து மண் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், பொன்னாக்குடி குளத்திலிருந்து அனுமதியின்றி மண் அள்ளிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், வட்டார மண்டல துணை வட்டாட்சியா் கணேஷ் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் ஆண்டோ பிரதீப் மண் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா்கள் பணகுடி அருகேயுள்ள தளவாய்புரம் சங்கா், பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரம் தாஸ், விட்டிலாபுரம் இசக்கி ஆகியோரை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT