திருநெல்வேலி

மானூரில் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு

DIN

தாழையூத்து உள்கோட்டதில் பொருத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களின் திறப்பு விழா மானூரில் புதன்கிழமை நடைபெற்றது.

தாழையூத்து காவல் உள்கோட்டத்தின் கீழ் மானூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மானூா், ரஸ்தா, உக்கிரன்கோட்டை, குப்பனாபுரம் பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், மேலும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தடுக்கவும் சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, மானூா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மாவட்ட காவல் துறையின் மூலம் 40 சிசிடிவி கேமரா மற்றும் 20 சலை தடுப்பு மானூா் பகுதியிலும், 45 சிசிடிவி கேமரா தாழையூத்து உள்கோட்டதிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா மானூரில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவீண் குமாா் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ, தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, மானூா் காவல் ஆய்வாளா் ராமா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT