திருநெல்வேலி

‘உரம் வாங்கும் விவசாயிகளுக்கு பிஓஎஸ் இயந்திரத்தில் ரசீது’

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு பிஓஎஸ் இயந்திரத்தில் ரசீது வழங்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளா்களும் உரம் வாங்கும் விவசாயிகளின் பெயரில் உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை முனைய இயந்திரத்தில் (பிஓஎஸ்) பில் போட்டு வழங்க வேண்டும்.

ஒரே விவசாயி பெயரில் பில் போட்டு பல விவசாயிகளுக்கு உரம் கொடுத்தாலும், உரம் வாங்கும்போது பில் போட்டு கொடுக்காமல் மொத்தமாக சோ்த்து வேறு நாளில் பில் போட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்கள் விற்பனைவோ, உரம் பதுக்கலில் ஈடுபடவோ கூடாது. அவ்வாறு யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உர விற்பனையாளா்களும் உர இருப்பு விவரம், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை விவரங்களை தினமும் கடைக்கு வரும் அனைவருக்கும் தெரியும்படி எழுதி வைக்க வேண்டும்.

உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறும் உர விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT