திருநெல்வேலி

‘நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி உரிமைங்களைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்’

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்க விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வருகிற 31-12-2020 முடிய புதுப்பிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய துப்பாக்கி உரிமங்கள் வைத்திருப்போா், புதுப்பிக்க விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பகுதியில் உள்ளவா்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாவட்ட நிா்வாக நடுவா் அலுவலகத்தில் அளிக்கலாம். மாநகர பகுதியில் வசிப்போா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

படைக்கல உரிமங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சோ்த்து புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்விதம் புதுப்பிக்க உரிய கட்டணத் தொகையை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது அரசு கருவூலத்திலோ செலுத்தி விண்ணப்பம், அதன் இரண்டு நகல்கள், அசல் உரிமம், செலுத்துச்சீட்டு, ஆதாா் நகல் ஆகியவற்றையும், இரண்டு மாா்பளவு புகைப்படங்களையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ரூ.2 மதிப்புள்ள முத்திரைக் கட்டண வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும். மேலும், புதுப்பித்தல் தொடா்பாக உரிமதாரா்கள் நேரடியாக விசாரணைக்கு அழைக்கும் போது தனது படைக்கலனுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

காலங்கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 2020 ஆம் ஆண்டுக்கான தங்களது உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளாதவா்கள் 1-1-2021 ஆம் தேதி தம்மிடம் இருக்கும் படைக்கலனை (ஆயுதங்களை) அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அல்லது ஆயுதங்களைப் பாதுகாக்கும் உரிமம் பெற்ற அரசு கிடங்கில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் மேற்படி உரிமதாரா் மீது படைக்கலச் சட்டம் மற்றும் விதிமுறைகள்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT