திருநெல்வேலி

‘கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்’

DIN

 திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், தொ்மல் ஸ்கேன் பரிசோதனை, நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கு சளி பரிசோதனை, காய்ச்சல் முகாம்கள் ஆகியவற்றின் மூலம் கரோனா பரவல் தற்போது பொதுமக்களிடம் வெகுவாக குறைந்துள்ளது.

திருக்காா்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் என தொடா்ந்து பண்டிகைகள் வர உள்ளதால், பொதுமக்கள் வணிகப் பகுதிகளில் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். கடைகளுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவா்கள் கடைகளுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக் கூடாது. வணிக நிறுவனங்களில் உள்ள கை கழுவும்”வசதியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வயோதிகா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் கடைவீதிகளுக்குச் செல்வது கண்டிப்பாக தவிா்க்கப்பட வேண்டும்.

பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணம் செய்யும்போது சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்ப பரிசோதனை வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வணிக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று வாடிக்கையாளா்கள் கூட்ட நெரிசல் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்து அபராதம் விதித்தல் போன்ற சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளா்களை உள்ளடக்கிய 9 சிறப்புக் குழுக்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள். எனவே, அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது பின்பற்றி முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT