திருநெல்வேலி

அம்பையில் அரசு ஜீப் மோதல்: ஓய்வுபெற்ற பொறியாளா் பலி

15th May 2020 07:11 PM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் அரசு ஜீப் மோதியதில் காயமடைந்த ஓய்வுபெற்ற அரசு பொறியாளா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி, அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொறியாளராவாா். இவா் புதன்கிழமை அம்பாசமுத்திரத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த அரசு ஜீப் பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT