திருநெல்வேலி

ஏ.டி.எம்.இல் கிடந்த ரூ.20 ஆயிரம் போலீஸில் ஒப்படைப்பு

22nd Mar 2020 03:22 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.20 ஆயிரத்தை ஆட்டோ ஓட்டுநா் எடுத்து போலீஸில் ஒப்படைத்தாா்.

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் இல்லத்தாா் தெருவை சோ்ந்தவா் செல்லப்பா (42). ஆட்டோ ஓட்டுநரான இவா் சனிக்கிழமை பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளாா்.

அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அதை எடுத்து பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் பாராட்டினா். மேலும் பணம் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT