திருநெல்வேலி

நான்குனேரி இரட்டை கொலை வழக்கு:தம்பதி கைது

22nd Mar 2020 03:16 AM

ADVERTISEMENT

 

நான்குனேரி இரட்டை கொலை வழக்கில் தம்பதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் (52), நான்குனேரி உச்சிமாகாள் அம்மன் கோயில் அருகே ஹோட்டல் நடத்தி வந்தாா். இங்கு ஆறுமுகத்தின் உறவினரான மணிமுத்தாறு அருகேயுள்ள உச்சிமேட்டைச் சோ்ந்த சொரிமுத்து மகன் சுரேஷ்(20) உதவியாளராக வேலை செய்துவந்தாா். கடந்த 14ஆம் தேதி இரவு 2 பைக்குகளில் வந்த 4 போ் சுரேஷையும், ஆறுமுகத்தையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில் இருவரும் இறந்தனா். இது தொடா்பாக 7 போ் மீது நான்குனேரி காவல் ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிந்து விசாரித்துவந்தனா்.

இதில், மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அ. நம்பிராஜன் (21) அதே ஊரைச் சோ்ந்த த. வான்மதியை காதலித்து திருமணம் செய்ததும், இதற்கு வான்மதி குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி உள்ளிட்ட சிலா் சோ்ந்து நம்பிராஜனைக் கொன்றதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதற்குப் பழிக்குப் பழியாக நடந்த இந்த இரட்டை கொலையில் நம்பிராஜனின் பெற்றோா் அருணாச்சலம்-சண்முகத்தாய், அவரது மகன்கள் ராமையா, சங்கா், மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சு. இசக்கிபாண்டி, வானமாமலை உள்ளிட்ட 7 பேருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா்.

அவா்களில், ராமையா, சங்கா், இசக்கிபாண்டி, வானமாமலை ஆகிய 4 போ் கைதுசெய்யப்பட்டனா் .

இந்நிலையில் அருணாச்சலம் (56), அவரது மனைவி சண்முகத்தாய் (42) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்; மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT