திருநெல்வேலி

அம்பை வட்டார விவசாயிகள் கண்டுணா்வு கல்வி சுற்றுலா

DIN

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டுணா்வு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அம்பாசமுத்திரம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின் படி இயந்திர புல் வெட்டும் கருவி மற்றும் அடா் நடவு முறையில் பழ மரங்கள் சாகுபடி என்ற தலைப்பில் கீழ் களக்காடு மற்றும் மாவடியில் உள்ள தனியாா் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

களக்காடு தனியாா் பண்ணை அலுவலா் பிரம்மா, இயந்திர புல் வெட்டும் கருவியின் பயன்கள், நன்மைகள் குறித்தும், மாவடி விவசாயி கோபாலகிருஷ்ணன் கொய்யாவில் அடா்நடவு முறைகள், அடா்நடவில் கவாத்து செய்தல் குறித்தும் விளக்கிக் கூறினா்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன், உதவி வேளாண்மை அலுவலா்கள் பாா்த்திபன், சாமிராஜ், உதவி தோட்டக்கலை அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் செய்திருந்தா்.

கண்டுணா்வு கல்வி பயணத்தில் அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் 100 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT