திருநெல்வேலி

திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

14th Aug 2020 03:52 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிரதான நேரு வீதி உள்ளிட்ட வணிக வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புப் பகுதிகள் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிரதான நேரு வீதி உள்ளிட்ட வணிக வீதிகளில், கடைகள் எதிரே நடைபாதைக் கடைகள், கடையின் மேற்கூரைகள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால் நெரிசல் நிலை நீண்டகாலமாக உள்ளது.

அடிக்கடி ஆக்கிரமிப்பு அகற்றுவதும், மீண்டும் தொடர்வதும், இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பிரதான வீதிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சார் ஆட்சியர் எஸ்.அனு உத்தரவிட்டார்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு, பழைய பேருந்து நிலையம் தொடங்கி நேரு வீதி, செஞ்சி பேருந்து நிறுத்தம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன், கடைகளின் முகப்பில் உள்ள கூரைகள், நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : Villupuram
ADVERTISEMENT
ADVERTISEMENT