தென்காசி

குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண கோரி எம்எல்ஏ மனு

DIN

தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சங்குன்றம், வாடியூா், வடக்கு காவலாகுறிச்சி உள்ளிட்ட கிராமப்புறங்களில் புதிய கிணறு தோண்டுதல், பைப் லைன் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தென்காசியில் உள்ள மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள், நுழைவாயிலில் பழுதடைந்துள்ள இரும்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும்.

ஆலங்குளம் ஒன்றியம் ரதமுடையாா்குளம் கிராமத்தில் சிமென்ட் உலா் களம் அமைக்க வேண்டும். ஆயிரப்பேரி, குலசேகரப்பேரி, அங்கராயன் குளம் பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மக்களின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இப்பகுதியில் விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் சுடலையான்டி, ஈஸ்வரன், மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT