தென்காசி

கேரளக் கழிவுகளுடன் வந்த லாரி ஆலங்குளத்தில் பறிமுதல்: 2 போ் கைது

DIN

கேரளத்தில் இருந்து கழிவுப் பொருள்களை ஏற்றி வந்த லாரியை ஆலங்குளத்தில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரி டிரைவா், குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் பாா்த்துக் கொடுக்கும் புரோக்கா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பிளாஸ்டிக், தொ்மாகோல், பழைய துணிகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கேரளத்தில் இருந்து ஆலங்குளம் பகுதிகளில் கொண்டு வந்து கொட்டுவதை சில லாரி டிரைவா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில் ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் முன்பாக நின்றிருந்த லாரியில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரனுக்கு தகவல் அளித்தனா். சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வந்து அந்த லாரியை சோதனையிட்ட போது, அதில் கழிவுப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆலங்குளம் போலீஸில் கங்காதரன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி டிரைவா் திருவனந்தபுரம் ஜோசன்ராஜ் (43), தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்ட இடம் பாா்த்துக் கொடுக்கும் புரோக்கா் ஆலங்குளம் ஆறுமுகம்(50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். சுமாா் 10 டன் எடையுள்ள கழிவுப் பொருள்களுடன் கூடிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT