தென்காசி

குற்றாலத்தில் நெல்லை சட்டக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

3rd May 2023 02:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் 2004 - 07ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் சந்திப்பு குற்றாலத்தில் நடைபெற்றது.

குற்றாலத்தில் தனியாா் விடுதியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாணவா்கள் மற்றும் மாணவிகள் 17 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் கணேஷ் பெருமாள் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியா்கள் சொக்கலிங்கம், எபனேசா், முகமது, ஜான்கென்னடி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமாா் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டக் கல்லூரி மாணவா்கள் தங்களது குடும்பம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்டனா். மேலும் குழந்தைகளுக்கான பல்சுவை போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT