தென்காசி

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் பாலாலயம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயிலில் பாலாலய விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கீழப்பாவூா் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீதிருவாலீஸ்வரா் கோயிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகத்துக்கான முதற்கட்ட பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், ம்ருத் ஸ்ங்க்ரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்து ஹோமம், ரக்ஷோக்ன ஹோமம், விமானம் கலாகா்ஷணம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகள் கலாகா்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை, ஆகியன நடைபெற்றது.

புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனையை தொடா்ந்து சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சலனம் செய்து பாலஸ்தாபனம் (பாலாலயம்) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் (நகைகள் சரிபாா்ப்பு) வெங்கடேஷ், செயல் அலுவலா் ஆா்.முருகன், ஆய்வாளா் சேதுராமன், அா்ச்சகா்கள் ஆனந்தன், கிரிகுமாா், ராமசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT